/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்
/
தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்
ADDED : செப் 01, 2025 10:25 PM

சூலுார்; தி.மு.க., ஆட்சியை அகற்ற, தமிழக மக்கள் தயாராகி விட்டனர், என, சூலுாரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், எம்.எல்.ஏ., கந்தசாமி பேசினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, வரும், 13 ம்தேதி சூலுாரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். பிரசார கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சூலுாரில் நடந்தது. நகர செயலாளர் கார்த்திகை வேலன் வரவேற்றார். எம்.எல்.ஏ., கந்தசாமி பேசுகையில், தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் நெருங்கி விட்டது. வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் துன்பத்துக்கு உள்ளாகி உள்ளனர். தி.மு.க., ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் தயாராகி விட்டனர். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பிரசார கூட்டத்துக்கு திரண்டு வரும் மக்களே அதற்கு சாட்சி. சூலுார் பிரசார கூட்டம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும்.
50 ஆயிரம் பேரை திரட்டி, சூலுார் தொகுதி, அ.தி.மு.க., வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும், என்றார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநில நிர்வாகி அசோகன், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், இரு கட்சிகளை சேர்ந்த நிர் வாகிகள் பலர் பங்கேற்றனர்.