/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதி
/
வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 26, 2025 09:58 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. இதனால், ரோட்டில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஆனைமலை நெல்லுகுத்திப்பாறை வடக்கு மாகாளியம்மன் கோவில் வீதியில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், துாக்கம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
நேற்று, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புகுந்த சாக்கடை கழிவுநீரை வாடகைக்கு மோட்டார் எடுத்து வந்து வெளியேற்றினர். சாக்கடை கால்வாய்களை முறையாக துார்வார வேண்டும்; மழைக்காலங்களில் நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் தெரிவித்தனர்.