/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி
/
வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி
ADDED : அக் 04, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர் : ரயில்வே துறை எல்லை தடுப்புகளை அமைப்பதால், வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சூலூர் அடுத்த கரவழி மாதப்பூர் மற்றும் தொட்டிபாளையம் பகுதியில் ரயில்வே கேட்கள் உள்ளன. இதனை ஒட்டியுள்ள பகுதியில், தடுப்பு கம்பிகளை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.