/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அலறுவதால் மக்கள் அவதி
/
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அலறுவதால் மக்கள் அவதி
ADDED : ஜன 02, 2025 08:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்பாடு அதிகரித்துள்ளதால், மக்கள் அலறுகின்றனர்.
பொதுக்கூட்டங்கள், பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில், அதிக சப்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சுப நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டம், கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு முதல் நாளில் இருந்தே, அதிக அலறல் சப்தத்துடன் பாட்டுக்கள் ஒலிக்கின்றன. குடியிருப்பு, மின்கம்பங்களில், ஒலிப்பெருக்கி அமைக்கப்படுவதால், முதியவர்கள், குழந்தைகள் என, பலரும் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை ரோடு, சூளேஸ்வரன்பட்டி பகுதியில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கியில் வெளி வந்த அலறல் சப்தம் காரணமாக, அப்பகுதி மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மக்கள் கூறியதாவது:
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளில் இருந்து வரும் அதிக சத்தம், செவிப்பறையை கிழிக்கும் வகையில் உள்ளது. அதிலும், ரோட்டை ஒட்டிய மின் கம்பங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டு, 45 டெசிபலுக்கு அதிகமான சப்தத்தில் பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது.
வணிகக் கடைக்காரர்கள், நோயாளிகள் என, பலரும் பாதிக்கின்றனர். இது போன்ற தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.