/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் காக்கைகளின் எச்சத்தால் மக்களுக்கு மூச்சு திணறல்
/
நீர் காக்கைகளின் எச்சத்தால் மக்களுக்கு மூச்சு திணறல்
நீர் காக்கைகளின் எச்சத்தால் மக்களுக்கு மூச்சு திணறல்
நீர் காக்கைகளின் எச்சத்தால் மக்களுக்கு மூச்சு திணறல்
ADDED : ஜூலை 30, 2025 08:51 PM
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் நீர் காக்கைகளின் எச்சத்தில் இருந்து வரும், துர்நாற்றத்தால், குழந்தைகள், முதியோர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
சிறுமுகை பேரூராட்சியின் மையப்பகுதியில் பவானி ஆறு ஓடுகிறது. பவானிசாகர் அணை தண்ணீரில் பகலில் வசிக்கும் நீர் காக்கைகள், இரவில் தங்குவதற்கும், தூங்குவதற்கும், நகரில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி வசித்து வருகின்றன.
இந்த நீர் காக்கைகள் போடும் எச்சம், மரத்தின் இலைகளிலும், கிளைகளிலும், நிலத்திலும் வெள்ளை நிறத்தில் படிந்துள்ளன. இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
இது குறித்து சிறுமுகை பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் ரியாஸ் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள, பல்வேறு வகையான மரங்களில், நீர் காக்கைகள் கூடுகள் கட்டி வசிக்கின்றன. மழை பெய்தால், காக்கைகளின் எச்சத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தால், குழந்தைகளுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. துர்நாற்றத்தால் மக்கள் உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது.
சிறுமுகைபுதூரில் அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலை மற்றும் துவக்க பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
எனவே மரங்களில் வசிக்கும் நீர் காக்கைகளை விரட்டவும், தங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.