/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்
/
கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்
கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்
கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்
ADDED : ஜூன் 29, 2025 03:22 AM
கோவை : கோவை மாநகராட்சியில், மாமன்ற கூட்டம் நடந்தது.
இதில், கல்வி குழு தலைவர் மாலதி கூறுகையில், ''எனது வார்டில் வீதி ரோடுகள் மோசமாக இருக்கின்றன. துாய்மை பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நிரந்தர பணியாளர்களை வார்டுக்கு பிரித்து தருவதாக கூறினீர்கள். ஏன் பிரித்துக் கொடுக்கவில்லை. வார்டு 'வாட்ஸ்அப்' குழுக்களில் கிழி கிழியென கிழிக்கின்றனர். கவுன்சிலர் எங்கே என மக்கள் கேட்கிறார்கள்,'' என்றார்.
பணிகள் குழு தலைவர் சாந்தி பேசுகையில், ''நிலைக்குழு கூட்டங்களுக்கு பொறியியல் பிரிவு அதிகாரிகள் வருவதில்லை. ஆனால், கமிஷனர் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் வருகின்றனர். கமிஷனர் கூறினால் மட்டுமே அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நகர பொறியாளரை, மொபைல் போனில் அழைத்தால், பேசுவதில்லை,'' என குற்றஞ்சாட்டினார்
வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா பேசும்போது, ''12 தீர்மானங்கள் வரி விதிப்பு குழு கூட்டத்துக்கு அனுப்பாமல், மன்றத்துக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது,'' என்றார்.
இதையடுத்து, நிலைக்குழு கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்க, கமிஷனர் அறிவுறுத்தினார்.
இ.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் சாந்தி பேசும்போது, ''தெருவிளக்குகள் எரிவதில்லை. 'ரானா' நிறுவனத்திடம் தெரிவித்தாலும் சரி செய்வதில்லை. அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர்,'' என்றார்.
ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா பேசுகையில், ''பாதாள சாக்கடை இணைப்புக்கு வரி புத்தகம் கொடுக்கக் கூடாது. அத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். வார்டுக்குள் குழிகள் அதிகமாக இருக்கின்றன. 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்,'' என்றார்.
'பொதுமக்கள் கண்காணிக்கிறார்கள்'
ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''குறிச்சி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ஒப்பந்த நிறுவனத்தினரிடம் எந்த பொருளும் இருப்பதில்லை. பாலங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. தண்ணீர், ரோடு, தெருவிளக்கு வசதி முக்கியம். சூயஸ் நிறுவனத்தினர் கட்டுப்பாடின்றி செயல்படுகின்றனர். அவர்களை மாநகராட்சி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். நம்மை பொதுமக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்,'' என்றார்.