/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டில் இருந்த அடிபம்ப் அகற்றப்பட்டதால் மக்கள் அதிருப்தி
/
பயன்பாட்டில் இருந்த அடிபம்ப் அகற்றப்பட்டதால் மக்கள் அதிருப்தி
பயன்பாட்டில் இருந்த அடிபம்ப் அகற்றப்பட்டதால் மக்கள் அதிருப்தி
பயன்பாட்டில் இருந்த அடிபம்ப் அகற்றப்பட்டதால் மக்கள் அதிருப்தி
ADDED : மே 22, 2025 11:49 PM

ஆனைமலை : பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியில், குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட அடிபம்பை தோண்டி எடுத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆனைமலை அருகே, ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால்சுவாமி மலை அடிவாரத்தில், கோபால்பதி பழங்குடியின மக்கள் குடியிருப்பு உள்ளது.இங்கு, 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, சில ஆண்டுகளுக்கு முன், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அடிபம்ப் வாயிலாக கிடைக்கும் நீரை கொண்டே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த அடிபம்ப்பை தோண்டி, மழைநீர் சேகரிப்பு திட்ட பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில்,'ஜல்லிபட்டி ஊராட்சி கோபால்பதியில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள அடிபம்ப்பை கழற்றி தோண்டி விட்டனர். இது குறித்து கேட்ட போது மழைநீர் சேகரிப்பு செய்வதற்கு பணிகள் நடப்பதாக கூறினர்.
பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அடிப்பம்ப்பை விட்டுவிட்டனர். தற்போது, பம்ப் அகற்றப்பட்டதால், மிகுந்த சிரமமாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அடிபம்ப்களை மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு பயன்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பயன்பாடு இல்லாத அடிபம்ப் என எண்ணி தோண்டி எடுக்கப்பட்டது. அதை மீண்டும் சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.