/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
/
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : அக் 29, 2024 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: ஆண்டிச்சிபாளையம் கிராம மக்கள், காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புகார் தெரிவித்தனர்.
காட்டம்பட்டி ஊராட்சி, ஆண்டிச்சி பாளையத்தில், 50 குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதி மக்கள் நேற்று காட்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஊர்மக்கள் கூறுகையில், 'எங்கள் ஊருக்கு குப்பை எடுப்பதற்கு, குப்பை வண்டி வருவதில்லை. குப்பை மலை போல் தேங்கி நிற்கிறது. மேலும், சமுதாய பொது உறிஞ்சுகுழி நிரம்பி, குழாய் வழியாக வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது.
இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என, புகார் தெரிவித்தனர்.