தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனரக வாகனங்களால் இடையூறு தடை விதிக்க மக்கள் கோரிக்கை

 கனரக வாகனங்களால் இடையூறு தடை விதிக்க மக்கள் கோரிக்கை

 கனரக வாகனங்களால் இடையூறு தடை விதிக்க மக்கள் கோரிக்கை


ADDED : மார் 05, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை - ஆழியாறு மெயின்ரோட்டில், ஒரு கி.மீ. சுற்றளவில் வால்பாறை நகரம் அமைந்துள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காமராஜ்நகர் வரையிலும் சாலையோரங்களின் இருபுறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

இது தவிர, சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனம், கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதாலும், அனைத்து வாகனங்களும் ஒரே ரோட்டில் செல்வதாலும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் நகருக்குள் வருவதால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வரும் கனரக வாகனங்கள், ரொட்டிக்கடை, பழைய வால்பாறை வழியாக மாற்றுவழிப்பாதையை பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us