/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
/
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : நவ 11, 2024 04:26 AM

வால்பாறை: வால்பாறையில், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், பொள்ளாச்சி பிரதான ரோட்டில், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள, ஒரு கி.மீ., துாரத்துக்கு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுலா வாகனங்களும் ரோட்டில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் நடுரோட்டில் நிறுத்தி, பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள வால்பாறையில், சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதால், மேலும் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அதிகாலை நேரத்தில், சரக்கு வாகனங்கள் நிறுத்தி பொருட்களை இறக்கி கொள்ள போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
'பார்க்கிங்' வசதியில்லை
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரும் வால்பாறை நகரில், வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லாததால், ரோட்டில் நிறுத்துகின்றனர்.
இதனால், நகரில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த வசதியாக, ஏற்கனவே திட்டமிட்டபடி நகராட்சி குப்பைக்கிடங்கு அருகில் நகராட்சி சார்பில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.