/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் சாலையில் குழிகள் : சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
அன்னுார் சாலையில் குழிகள் : சீரமைக்க மக்கள் கோரிக்கை
அன்னுார் சாலையில் குழிகள் : சீரமைக்க மக்கள் கோரிக்கை
அன்னுார் சாலையில் குழிகள் : சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 05, 2025 09:53 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் அன்னூர் சாலையில், உடைந்துள்ள குடிநீர் குழாய் உடைப்பை, சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்கள் பதித்து, 35 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது. மேட்டுப்பாளையம், அன்னூர் சாலை வழியாக தினமும், நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு சென்று வருகின்றன.
இது அல்லாமல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. மேட்டுப்பாளையம் நகரில் அன்னூர் சாலையில், தனியார் மருத்துவமனை அருகே, 50 அடிக்குள், இரண்டு இடங்களில், திருப்பூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வழியாக வாகனங்கள் செல்வதால், குழாய் உடைந்த இடத்தில், சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வழியாக இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்கள், இக்குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

