/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்காடு அரசு பள்ளிக்கு கிடைத்தது விளையாட்டு அறை
/
வெள்ளியங்காடு அரசு பள்ளிக்கு கிடைத்தது விளையாட்டு அறை
வெள்ளியங்காடு அரசு பள்ளிக்கு கிடைத்தது விளையாட்டு அறை
வெள்ளியங்காடு அரசு பள்ளிக்கு கிடைத்தது விளையாட்டு அறை
ADDED : நவ 05, 2025 09:53 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு கிராமம் உள்ளது. இங்கு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு காரமடை சுற்றுவட்டார பகுதிகளான கண்டியூர், தேக்கம்பட்டி, புஜங்கனூர், ஆதிமாதையனூர், மருதூர், திம்மம்பாளையம், தாயனூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர்.
இப்பள்ளியில் விளையாட்டு அறை அமைக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, விளையாட்டு அறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் தலைமை தாக்கினார்.
இதற்கான நிதியை ராமகிருஷ்ணா விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரனிடம் வழங்கினார்.----

