/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த நிலையில் மின் கம்பம் மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
/
சேதமடைந்த நிலையில் மின் கம்பம் மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
சேதமடைந்த நிலையில் மின் கம்பம் மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
சேதமடைந்த நிலையில் மின் கம்பம் மாற்றியமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 11:10 PM

வால்பாறை : சேதமான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை காந்தி சிலை அருகே, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மேலிருந்து கீழ் வரை சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள மின் கம்பத்தினால், மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாபயணியரும் இந்த நடைபாதையில் நடந்து செல்கின்றனர். நடைபாதையை ஒட்டி வைக்கப்பட்டுள்ள மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
தற்போது காற்றுடன் கூடிய கன மழை பெய்து வரும் நிலையில் மின் கம்பம் முறிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக, மின் கம்பத்தை மாற்றியமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.