/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி அருகே லாரிகள் 'பார்க்கிங்': கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
/
பள்ளி அருகே லாரிகள் 'பார்க்கிங்': கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
பள்ளி அருகே லாரிகள் 'பார்க்கிங்': கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
பள்ளி அருகே லாரிகள் 'பார்க்கிங்': கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : அக் 24, 2025 11:46 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசுப்பள்ளி அருகே, லாரிகள் நிறுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, மூன்று அங்கன்வாடி மையங்களும் உள்ளன.இப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் குமரன் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி அருகே வாகன நிறுத்தப்பகுதியாக சிலர் மாற்றி, லாரிகளை நிறுத்தம் செய்வதால் இடையூறு ஏற்படுகிறது, என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி குமரன் நகரில் அங்கன்வாடி மையங்கள், பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே லாரிகளை வரிசையாக நிறுத்தம் செய்கின்றனர்.இதனால், அவ்வப்போது இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம் மறைவாக இருப்பதால் சிலர் குப்பை கொட்டுகின்றனர். சில சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.
பள்ளி அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தும், போலீசாரிடம் முறையீட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
லாரி நிறுத்துவோரிடம் இங்கு நிறுத்த வேண்டாம் என தெரிவித்தாலும், செவி சாய்ப்பதில்லை. இங்கு நிறுத்தப்படும் லாரி உரிமையாளர் ஒருவர், போலீசாரின் உறவினர் என்பதால் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களை விடுவதற்கு வரும் பெற்றோரும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

