/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்புகளில் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
குடியிருப்புகளில் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : அக் 24, 2025 11:45 PM
பொள்ளாச்சி: சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பேரூராட்சி வார்டுகளில், போதுமான வடிகால் வசதிகள் இல்லை. இதனால் மழை காலங்களில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, தெருக்கள் மற்றும் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதேபோல, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், 'ரிங்' அமைத்தும், ஓடைக்கல் அடுக்கி கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், மழையின்போது, வீதிகளில் கழிவுநீருடன் வெள்ளம் கலந்தோடுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. தேவையான இடங்களில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பெரும்பாலான வார்டுகளில், சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திறந்த நிலையில், சாக்கடை அமைக்க அரசு தடை விதித்துள்ளது. பாதாள சாக்கடை அமைக்கவே அனுமதிக்கப்படுகிறது.
அதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. நகராட்சியுடன் பேரூராட்சி நிர்வாகம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதற்கான பணிகள் முழுமை பெறும்,' என்றனர்.

