/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
/
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2025 10:08 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி முன் உள்ள நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் பள்ளி அமைந்துள்ளதால், இந்த பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாலையை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்தும், இதுவரை வேகத்தடை எதுவும் அமைக்கப்படவில்லை.
இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை கருதி பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் திருச்செல்வி மாணவர்கள் சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உதவி வருகிறார். சாலை விபத்து ஏற்படும் முன் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அப்பகுதி மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.--