/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க மக்கள் கோரிக்கை
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : டிச 12, 2024 05:41 AM
வால்பாறை; வால்பாறை, சேடல்டேம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள சோலையார் நகர் பகுதியில் உள்ள, சிந்தாமணி ரேஷன் கடையில், 720 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடையில் சேடல்டேம், பெரியார் நகர், சோலையாறுடேம் இடது கரை, வலது கரை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சோலையாறு டேம் செல்லும் வழியில் உள்ள சேடல்டேம் பகுதி மக்கள் கூறியதாவது: சேடல்டேம் பகுதியில், 150 ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைவரும் அருகில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் கூலி வேலை செய்து வருகிறோம். இந்நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ., தொலைவில் உள்ள சோலையாறு நகர் ரேஷன் கடைக்கு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, மழை காலங்களில் மிகுந்த சிரமத்துடன் ரேஷன் பொருட்கள் வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சேடல்டேம் மக்களின் சிரமத்தை உணர்ந்து, இந்தப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து, வாரத்தில் ஒரு நாள் வீதம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.