/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் விண்ணப்பிக்க திரண்ட மக்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் விண்ணப்பிக்க திரண்ட மக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் விண்ணப்பிக்க திரண்ட மக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் விண்ணப்பிக்க திரண்ட மக்கள்
ADDED : ஜூலை 16, 2025 08:49 PM

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு, வடபுதூர் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இதில், 15 அரசு துறைகளின் கீழ் 46 சேவைகள் இருந்தது. முகாமில், கோவை மாவட்ட கலெக்டர், எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மகளிர் உரிமை தொகைக்கு, 200க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் கொடுத்தனர். இதே போன்று, ஆதார் மற்றும் இ - சேவை மையம் பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். மற்ற துறைகளை காட்டிலும், இந்த இரண்டில் மட்டும் அதிகப்படியான மக்கள் கூட்டமாக இருந்தனர். அடுத்த முகாம், வரும் 25ம் தேதி சொலவம்பாளையம் செக்போஸ்ட் அருகே, தனியார் திருமண மண்டபத்தில், கொண்டம்பட்டி, அரசம்பாளையம் சொலவம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடக்கிறது.