/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு முகாமில் பங்கேற்று மனு தர மக்களுக்கு அழைப்பு
/
சிறப்பு முகாமில் பங்கேற்று மனு தர மக்களுக்கு அழைப்பு
சிறப்பு முகாமில் பங்கேற்று மனு தர மக்களுக்கு அழைப்பு
சிறப்பு முகாமில் பங்கேற்று மனு தர மக்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 29, 2025 08:29 PM
கோவில்பாளையம்; கீரணத்தம் ஊராட்சியில் நாளை ( 31ம் தேதி) 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக அரசு சார்பில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் முகாம் ஒவ்வொரு தாலுகாவிலும் நடைபெற்று வருகிறது.
அன்னூர் தாலுகாவில், ஆறாம் கட்டமாக, சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கீரணத்தம் ஊராட்சியில் நாளை (31ம் தேதி) முகாம் நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும்.
முகாமில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
'பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை, உரிய ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்,' என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.