/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்
/
சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்
ADDED : ஜன 13, 2024 01:58 AM
கோவை:கோவையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பண்டிகையை கொண்டாட நேற்று காலை முதலே சொந்த ஊர்களுக்கு பொங்கல் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.
கோவை மாவட்டத்தில் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சிகளை முடித்து நேற்று இரவு பலர் சொந்த ஊர் சென்றனர்.
இதனால், நேற்று மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
குறிப்பாக, நேற்று இரவு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 10:30 மணியளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.