sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரிப் பேட்டையாக்குகிறது மாநகராட்சி தி.மு.க., மீது கோவை தெற்குப்பகுதி மக்கள் அதிருப்தி

/

ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரிப் பேட்டையாக்குகிறது மாநகராட்சி தி.மு.க., மீது கோவை தெற்குப்பகுதி மக்கள் அதிருப்தி

ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரிப் பேட்டையாக்குகிறது மாநகராட்சி தி.மு.க., மீது கோவை தெற்குப்பகுதி மக்கள் அதிருப்தி

ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரிப் பேட்டையாக்குகிறது மாநகராட்சி தி.மு.க., மீது கோவை தெற்குப்பகுதி மக்கள் அதிருப்தி


ADDED : டிச 29, 2024 06:29 AM

Google News

ADDED : டிச 29, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்த வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டத்தை முடக்கி, காய்கறி மொத்த மார்க்கெட், பழ மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டிருப்பது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாநகராட்சி சார்பில், வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில் ரூ.168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. 50 சதவீத தொகையான ரூ.84 கோடியை தமிழக அரசு வழங்கும்; மீதமுள்ள, 84 கோடியை மாநகராட்சி பொது நிதியில் இருந்தோ அல்லது வங்கியில் கடன் பெற்றோ, செலவழித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

காற்றோடு போன கோரிக்கை


பிரதான கட்டடம் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கான 'ரேக்' மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது; 37 சதவீத பணி முடிந்திருக்கிறது; மாநகராட்சி பங்களிப்பில் ரூ.52.46 கோடி செலவிடப்பட்டது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை ரூ.84 கோடி விடுவிக்கவில்லை.

2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதிர்ச்சியடைந்த மக்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்க்காமல், மீதமுள்ள நிதியை ஒதுக்கி, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். 2022ல் அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனராக இருந்த பொன்னையா ஆகியோர், நேரில் ஆய்வு செய்தனர். திட்டத்தை விரிவாக விளக்கிய மாநகராட்சி அதிகாரிகள், 'டுபிட்கோ' மூலம் கடன் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் இட மாறுதலாகி சென்றதும், இத்திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வருக்கு தவறான தகவல்


கடந்த, நவ., 5ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் முதல்வர் விசாரித்தார்.

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் உருவாக்கினால், கோவையின் தெற்குப்பகுதி எத்தகைய வளர்ச்சி அடையும் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிக் கூறவில்லை. அப்பகுதியை காய்கறி மற்றும் பழ மார்க்கெட் மற்றும் லாரிப் பேட்டையாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்த பஸ் ஸ்டாண்ட், எல் அண்டு டி பைபாஸில் இருந்து, 1.95 கி.மீ., துாரத்திலும், நகர மையத்தில் இருந்து, 8.25 கி.மீ., துாரத்திலும் அமைந்திருக்கிறது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும். நீலாம்பூரில் அமையும் 'மெட்ரோ ரயில் டெப்போ'வுக்கு பயணிகள் எளிதாக செல்ல முடியும்.

அதிகாரிகள் ஆய்வு பொய்யா?


பஸ் ஸ்டாண்ட் அமைவதற்கான சாத்தியக்கூறுகளை, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் 'டுபிட்சல்', 'டுபிட்கோ' உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கள ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு அனுமதி அளித்தனர்.

அதன் பிறகே, மாநகராட்சி நிதியை பயன்படுத்தி, கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உயர் பொறுப்பில் உள்ளனர்.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் செயல்பட தகுதியான இடமில்லை எனகூறுவது முரண்பாடாக இருக்கிறது. இதற்கு முன் பணிபுரிந்த அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் கட்ட அனுமதி அளித்தது எப்படி என்கிற கேள்வியும் எழுகிறது.

லாரிப்பேட்டையாக மாற்றம்


இச்சூழலில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை மார்க்கெட் மற்றும் லாரிப் பேட்டை உபயோகத்துக்கு மாற்றுவதற்கு உத்தேசித்துள்ள தீர்மானம், வரும், 30ம் தேதி (திங்கட்கிழமை) மாநகராட்சியில் நடைபெற உள்ள மாமன்ற கூட்ட ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.

ஆனால், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை ஏன் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என்பதற்கான காரணத்தை, மாநகராட்சி நிர்வாகம் சொல்லவில்லை. இதிலிருந்தே திட்டமிட்டு, தெற்குப்பகுதியை தி.மு.க., அரசு புறக்கணிக்கிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏனெனில், காய்கறி மொத்த மார்க்கெட், பழ மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டை உருவாக்குவதற்கு செலவிட உத்தேசித்துள்ள தொகையில், பஸ் ஸ்டாண்டை முழுமையாக கட்டி முடித்து விடலாமே என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

கோவைக்கு என்ன செய்ய போகிறார்?

2014ல் கோவையில் மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்தது. மேயர் வேட்பாளராக களமிறங்கிய ராஜ்குமாரை ஆதரித்து, அப்போதைய முதல்வர் ஜெ., பிரசாரம் செய்தபோது, 'கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்' என அறிவித்திருந்தார். அந்த ராஜ்குமார், தற்போது தி.மு.க.,வில் இணைந்து, கோவை எம்.பி.,யாகி உள்ளார். இப்போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் துடிக்கிறது. தி.மு.க.,வுக்கு தாவி எம்.பி.,யாகி விட்ட ராஜ்குமார், கோவையின் ஒரு பகுதி முன்னேற்றத்தை நசுக்கும் திட்டத்தை தடுப்பாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us