/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் எல்.ஜி. நகர் மக்கள்
/
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் எல்.ஜி. நகர் மக்கள்
ADDED : அக் 26, 2025 02:50 AM
கோவில்பாளையம்: கொண்டையம்பாளையம் ஊராட்சியில், கோட்டைப்பாளையம் அருகே எல்.ஜி. நகர் உள்ளது. 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், ' எல்.ஜி., நகரில் சாலை மிக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. பலரும் இரு சக்கர வாகனத்தில் வரும்போது விழுந்து விடுகின்றனர்.
மழைக்காலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வெளியேறிச்செல்ல வடிகால் வசதியில்லை.
மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.
தார் சாலை அமைத்து தரவேண்டும். அடிப்படை வசதிகள் வேண்டும் என கொண்டையம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாகவும், கிராமசபை கூட்டங்களிலும் மனு கொடுத்துள்ளோம்.
சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், பலமுறை மனு அளித்தும், சாலை அமைக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் 150 குடும்பங்களும் தவித்து வருகிறோம்' என்றனர்.

