/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் 'பகீர்'; கல் விழுந்து சேதமானது கார்
/
அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் 'பகீர்'; கல் விழுந்து சேதமானது கார்
அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் 'பகீர்'; கல் விழுந்து சேதமானது கார்
அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் 'பகீர்'; கல் விழுந்து சேதமானது கார்
ADDED : டிச 04, 2024 11:07 PM

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், மேம்பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் அலட்சியத்தால், மேலிருந்து கான்கிரீட் கல் பெயர்ந்து, ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்ததில், 'பேனட்' மற்றும் கண்ணாடி நொறுங்கியது. இச்சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஏறு தளம், இறங்கு தளங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், பக்கவாட்டுச் சுவர் கட்டுவதற்கு கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை, கட்டுமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் செய்தனர்.
அதற்காக, மேம்பாலத்தின் மேற்பகுதியை தயார் செய்து கொண்டிருந்தபோது, மேலிருந்து கான்கிரீட் கல் பெயர்ந்தது.
அவ்வழியாக வந்த, டி.என். 38 டிஎச் 4700 என்ற பதிவெண் கொண்ட கார் மீது கல் விழுந்தது. மேலிருந்து விழுந்த வேகத்தில், கார் 'பேனட்' பகுதி சேதமடைந்து, கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுமான தொழிலாளர்களின் அஜாக்கிரதையால், இச்சம்பவம் நடந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் இது, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், சில நாட்களுக்கு முன், உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலத்தில் கரும்புக்கடை சாரமேடு பகுதியில், மேம்பாலத்தின் மேற்பரப்பில் இருந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
இதுவும், வாகன ஓட்டிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, ''கான்கிரீட் கல் விழுந்த இடத்தில் ஆய்வு செய்தோம். பிரிகாஸ்ட் முறையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
''மையத்தடுப்பு மற்றும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் கான்கிரீட் போடப்படும்.
அப்பணியின்போது கான்கிரீட் கலவை கொட்டிக் கிடக்கும். கான்கிரீட் பாக்ஸ் இணைப்பு பகுதியில் ஒரு கல் இருந்திருக்கிறது. இடைவெளி வழியாக கார் மீது கல் விழுந்திருக்கிறது.
''பாதிக்கப்பட்ட காரை, ஒப்பந்த நிறுவனத்தினர் சரி செய்து கொடுப்பர். ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்றார்.