/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயான பூமியில் தீப்பிடித்து எரிந்த குப்பை; நள்ளிரவு சம்பவத்தால் மக்கள் பீதி
/
மயான பூமியில் தீப்பிடித்து எரிந்த குப்பை; நள்ளிரவு சம்பவத்தால் மக்கள் பீதி
மயான பூமியில் தீப்பிடித்து எரிந்த குப்பை; நள்ளிரவு சம்பவத்தால் மக்கள் பீதி
மயான பூமியில் தீப்பிடித்து எரிந்த குப்பை; நள்ளிரவு சம்பவத்தால் மக்கள் பீதி
ADDED : மார் 11, 2024 09:38 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, குஞ்சிபாளையத்தில் குப்பைகளை கொட்டும் இடத்தில், இரவில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட குஞ்சிபாளையத்தில், ஆறு ஏக்கருக்கும் அதிகமாக மயான பூமி உள்ளது. குஞ்சிபாளையம், நஞ்சேகவுண்டன்புதுார் மக்கள், இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு திடீரென குப்பை கொட்டப்பட்ட பகுதி தீப்பிடித்து எரிந்து, புகை மண்டலமாக மாறியது.தகவல் அறிந்த மக்கள், தீயணைப்பு துறை, மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:
குஞ்சிபாளையம் கிராமத்தில், மயான பூமியை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவ்வப்போது தீப்பிடித்து எரிவதால், ஊருக்குள் புகை மண்டலமாக மாறுகிறது. இதனால், பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது.
இங்கு குப்பை கொட்டுவதால், அருகே உள்ள விளை நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ அணைக்கப்பட்டும் அப்பகுதி புகை மண்டலமாக உள்ளது. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை தவிர்த்து, மாற்று இடத்துக்கு மாற்ற வேண்டும், என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். உரிய தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வீடியோவால் பரபரப்பு
மயான பூமியில் குப்பை கொட்டப்பட்ட இடத்தில் தீப்பிடித்து எரிந்ததை, அவ்வழியாக சென்ற ஒருவர், 'மயானத்தில் குப்பை கொட்டப்பட்ட பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிகிறது. உடனடியாக அனைவரும் வாங்க; இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண்போம்,' எனக்கூறி, குப்பை கிடங்கை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனால், குஞ்சிபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

