/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாய கூடத்தில் போலீஸ் ஸ்டேஷன் மக்கள் எதிர்ப்பு
/
சமுதாய கூடத்தில் போலீஸ் ஸ்டேஷன் மக்கள் எதிர்ப்பு
சமுதாய கூடத்தில் போலீஸ் ஸ்டேஷன் மக்கள் எதிர்ப்பு
சமுதாய கூடத்தில் போலீஸ் ஸ்டேஷன் மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 13, 2025 09:49 PM
சூலூர்: சூலூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளை பிரித்து, நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடிவு செய்யப்பட்டது. நிரந்தர கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில், தற்காலிகமாக நீலம்பூரில் இருந்து ஆச்சான் குளம் செல்லும் வழியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக் கூடத்தில் புதிய ஸ்டேஷனை துவக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று மாலை போலீசார் அவசர, அவசரமாக சமுதாய கூடத்தில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த மக்கள், சமுதாய நலக் கூடத்தில் ஸ்டேஷன் துவக்க வேண்டாம், என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டு விஷேங்கள் இங்கு தான் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயன்பாட்டுக்காக போராடி பெற்றதை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்' என்றனர்.

