/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழாய் உடைப்பை அடைக்க விடமாட்டோம்'
/
'குழாய் உடைப்பை அடைக்க விடமாட்டோம்'
ADDED : நவ 13, 2025 09:49 PM

அன்னூர்: அன்னூர் அருகே நல்லிசெட்டி பாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது.
இக்குளத்துக்கு மிக சிறிய குழாய் பதிக்கப்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்த குளத்தில் உள்ள வால்வில் உடைப்பு ஏற்பட்டதால் அதை அடைப்பதற்காக ஒரு வாரமாக அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை இதுகுறித்து அன்னூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யமுனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 'குழாய் உடைப்பால், மேற்கு பகுதியில் 185 குளங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை.
எனவே உடைப்பை அடைக்க ஒத்துழைக்க வேண்டும்,' என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும் விவசாயிகள் ஏற்க மறுத்தனர். குளத்திற்கு பொருத்தப்பட்ட குழாயை பெரிது படுத்திய பிறகே உடைப்பை அடைக்க விடுவோம்,' என்றனர்.
இதனால் ஆலோசனைக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

