/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு வசதி கேட்டு கருப்பு கொடி கட்டி மக்கள் காத்திருப்பு போராட்டம் கருப்பு கொடி கட்டி மக்கள் காத்திருப்பு போராட்டம்

ADDED : டிச 08, 2025 05:44 AM

சூலூர்: ஆக்கிரமிப்பை மீட்டு, ரோடு வசதி செய்து தரக்கோரி, நாகையன் தோட்டத்து சாலை மக்கள், கருப்பு கொடி கட்டி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது, நாகையன் தோட்ட சாலை பகுதி. இந்த ரோட்டில் பாலு கார்டன், லட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல தொழிற்சாலைகளும் உள்ளன. இப்பகுதிகளுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறையினர் அவர்களுடன் சமாதானம் பேசினர். எம்.எல்.ஏ., கந்தசாமி உள்ளிட்ட பலர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதிக்கு செல்ல இருப்பது ஒரே ஒரு ரோடு தான்; அதுவும், ஐந்து ஆண்டுகளாக மேடு, பள்ளமாக உள்ளது.
மழை பெய்தால் ரோட்டில் மழை நீர் தேங்குவதால் நடக்கக் கூட முடிவதில்லை. ரோட்டை ஒட்டி ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் வழிப்பாதையை மீட்டு தரக்கோரி கோரிக்கை விடுத்தும், வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.