/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் முறையாக வழங்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் முறையாக வழங்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் முறையாக வழங்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் முறையாக வழங்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 25, 2025 11:36 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையத்தில், குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகப்பா காலனி நகர், ஈப்பன் நகர், பி.ஆர். நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில், குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: தனியார் தொலைபேசி நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டதால், பல இடங்களில், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
இதனால், கடந்த, 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைய வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், ஊராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, குடிநீர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியலால் பாதிப்பு
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், பொள்ளாச்சி - உடுமலை ரோடு மற்றும் சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டன; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போராட்டம் முடிந்ததும், போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.