/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழிகளால் விபத்து அபாயம்; அதிருப்தியில் மக்கள் மறியல்
/
குழிகளால் விபத்து அபாயம்; அதிருப்தியில் மக்கள் மறியல்
குழிகளால் விபத்து அபாயம்; அதிருப்தியில் மக்கள் மறியல்
குழிகளால் விபத்து அபாயம்; அதிருப்தியில் மக்கள் மறியல்
ADDED : டிச 06, 2024 11:22 PM
ஆனைமலை; ஆனைமலை அருகே 'அம்ருத், 2.O' திட்ட குழிகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே கோட்டூரில், 'அம்ருத், 2.O' குடிநீர் திட்டத்துக்காக, 6வது வார்டு பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பின், குழாய்கள் பதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், குழிகள் மூடப்படாமலேயே உள்ளது. இதனால், பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள், ஆனைமலை - கோட்டூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'அம்ருத் 2.O' திட்டத்தில் உரிய முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. குழாய் பதிக்கப்பட்ட பின்பும் குழிகள் மூடப்படாமல் உள்ளது. எனவே, விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து, போலீசார் சமரச பேச்சு நடத்தி, பேரூராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.