/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராவத்துாரில் மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
/
ராவத்துாரில் மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஜூலை 13, 2025 12:25 AM
சூலூர் : குடிநீர் வந்து, 15 நாட்கள் ஆனதால், ஆவேசமடைந்த ராவத்தூர் கிராம மக்கள், மறியலில் ஈடுபட்டனர்.
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது ராவத்தூர் கிராமம். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கடந்த, இரண்டு வாரங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் ஆவேசமடைந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, ராவத்தூர் விநாயகர் கோவில் முன், காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் வந்து, 15 நாட்களுக்கு மேலாகிறது. குழாய் உடைந்தது தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர், சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்' என்றனர்.
ஓரிரு நாளில் குடிநீர் சப்ளையை சீராக்குவதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்ததால், பெண்கள் கலைந்து சென்றனர்.