/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சேமிக்கும் மக்கள்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சேமிக்கும் மக்கள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சேமிக்கும் மக்கள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சேமிக்கும் மக்கள்
ADDED : ஜன 31, 2024 12:08 AM
ஆனைமலை;ஆனைமலை அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை, மக்கள் சேமித்து பயன்படுத்துகின்றனர்.
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் முறையாக வினியோகம் இல்லாத சூழல் உள்ளது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்துக்கு ஒரு முறை, சில நேரங்களில், 10 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
'சம்ப்' பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், அங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வேடசந்துார் அருகே கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. குடிநீர் முறையாக வினியோகம் இல்லாத சூழலில், உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. பொதுமக்கள் இந்த குடிநீரை பிடித்து பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை, எடுத்து செல்கிறோம். குடிநீர் வினியோகம் போதுமானதாக இல்லாத சூழலில், இந்த நீரை பயன்படுத்துகிறோம். குழாய் உடைப்பை சீரமைத்து, கோடை காலம் துவங்குவதற்குள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.