/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடையை கடக்க திணறும் மக்கள்
/
வேகத்தடையை கடக்க திணறும் மக்கள்
ADDED : ஏப் 10, 2025 10:07 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில், ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட் வழியாக வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு, ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் திடீரென இருபுறமும் அருகருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட்டில் சில நாட்களுக்கு முன், ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. அதன்பின், வாகனங்களின் வேகத்தை குறைக்க ரயில்வே கேட் அருகே இருபுறமும் அடுத்தடுத்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களில் செல்லும் போது, தடுமாறும் நிலை ஏற்படுகிறது. பெண்கள், முதியவர்கள், வாகனங்களை இயக்க முடியாமல் திணறுகின்றனர். பின்னால் வரும் வாகனங்கள், முன் செல்லும் வாகனங்களின் மீது மோதுகின்றன. கர்ப்பிணிகளை அழைத்துச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மெதுவாக சென்றாலும் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.
விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைத்தாலும், வேகத்தடையால் விபத்துகள் ஏற்படும் அபாயமே உள்ளது. பொதுமக்களின் நலனை கருதி இந்த வேகத்தடை இடையூறு இன்றி கடந்து செல்லும் வகையில், இடைவெளி விட்டு மாற்றி அமைக்க வேண்டும். அப்போது தான் விபத்துகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.