/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு புறவழிச்சாலை பணி: இழுபறியால் மக்கள் அவதி
/
மேற்கு புறவழிச்சாலை பணி: இழுபறியால் மக்கள் அவதி
ADDED : பிப் 16, 2024 12:23 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள, ஜமீன் ஊத்துக்குளியில் துவங்கி, கிருஷ்ணா குளம் ரோடு, பாலக்காடு ரோடு, குப்பை கிடங்கு ரோடு, ஆர்.பொன்னாபுரம் வழியாக கோவை ரோட்டில் இணைகிறது மேற்கு புறவழிச்சாலை. இதனால், பொள்ளாச்சி நகருக்கு வெளியே, திருச்சூர் ரோடு, பாலக்காடு ரோடு, நடுப்புணி ரோடுகளை கோவை ரோட்டுடன் இணைக்கப்படும்.
இந்த திட்ட பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பணிக்காக ஆர்.பொன்னாபுரம் ரோடு தோண்டப்பட்டது. அதேபோன்று, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து, பாலக்காடு ரோடு நல்லுார் சந்திப்பு வரையிலும் ரோட்டின் இருபக்கமும் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டன. புறவழிச்சாலையும் அமைக்கவில்லை, மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பகுதிகளும் சீரமைக்கப்படவில்லை. இப்பகுதிகளில் விபத்துகள் அதிகரித்து வருவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.