ADDED : மார் 18, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: தமிழகத்தில் தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடப்பதால், மின் தடை செய்யப்படுவதில்லை. ஆனால், கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மின் வாரிய ஊழியர்களிடம் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை, என, மக்கள் தெரிவித்தனர்.
