/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாற்றை கடக்க ஆபத்தான நிலையில் மக்கள் பரிசல் பயணம்
/
காந்தையாற்றை கடக்க ஆபத்தான நிலையில் மக்கள் பரிசல் பயணம்
காந்தையாற்றை கடக்க ஆபத்தான நிலையில் மக்கள் பரிசல் பயணம்
காந்தையாற்றை கடக்க ஆபத்தான நிலையில் மக்கள் பரிசல் பயணம்
ADDED : டிச 03, 2024 06:39 AM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை காந்தையாற்றை கடக்க ஆபத்தான நிலையில் அப்பகுதி மக்கள் பரிசலில் பயணம் மேற்கொள்கின்றனர். ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை மோட்டார் படகை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு கட்டிய உயர் மட்ட பாலம், தண்ணீர் அதிகமாகும் போது மூழ்கி விடும். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, காந்தையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் கட்டுமான பணிகள் முடியவில்லை.
தற்போது காந்தையாற்றில், நீர் வரத்து அதிகரித்து 30 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் சாலையும், பழைய பாலமும், தண்ணீரில் மூழ்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மோட்டார் படகை, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக இயக்கி வருகிறது. ஒருமுறை படகில், 20 நபர்களை அழைத்து வர இடவசதி உள்ளது. காலையிலும் மாலையிலும் மட்டுமே, மாணவர்களுக்காகவும் மக்களுக்கும் மோட்டார் படகு இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் சும்மா நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க ஆபத்தான நிலையில், பரிசலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது மோட்டார் படகை பொதுமக்களுக்காக இயக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.