/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறுந்து தொங்கும் மின் கம்பி அச்சத்துடன் மக்கள் பயணம்
/
அறுந்து தொங்கும் மின் கம்பி அச்சத்துடன் மக்கள் பயணம்
அறுந்து தொங்கும் மின் கம்பி அச்சத்துடன் மக்கள் பயணம்
அறுந்து தொங்கும் மின் கம்பி அச்சத்துடன் மக்கள் பயணம்
ADDED : மே 24, 2025 06:27 AM

நெகமம் : கோவில்பாளையம் --- நெகமம் ரோட்டோரத்தில் மின்கம்பத்திலுள்ள கம்பி அறுந்து தொங்குவதால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
கோவில்பாளையம் --- நெகமம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த வழித்தடத்தில், கக்கடவு பகுதியில் ரோட்டோரம் உள்ள மின் கம்பத்தில், கம்பி அறுந்து தொங்கிய நிலையில் உள்ளது.
நீளமான கம்பி தாழ்வாக தொங்குவதால், இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உரசினால், மின் கசிவு ஏற்பட்டு விபத்தை விளைவிக்கலாம். மேலும், கோடை காலங்களில் டிராக்டர் வாயிலாக அதிகளவு வைக்கோல் மற்றும் தேங்காய் மட்டை பாரம் ஏற்றி செல்லும் போது, மின் கம்பி உரசினால் தீப்பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த மின் கம்பியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.