/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கார்'களில் படம் காட்டும் சிறார்கள்; அச்சத்தில் நடுங்கும் மக்கள்
/
'கார்'களில் படம் காட்டும் சிறார்கள்; அச்சத்தில் நடுங்கும் மக்கள்
'கார்'களில் படம் காட்டும் சிறார்கள்; அச்சத்தில் நடுங்கும் மக்கள்
'கார்'களில் படம் காட்டும் சிறார்கள்; அச்சத்தில் நடுங்கும் மக்கள்
ADDED : அக் 21, 2025 08:11 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், சமீபகாலமாக சிறார்கள், பைக் மட்டுமின்றி கார் ஓட்டுவதையும் வாடிக்கையாக்கி வருகின்றனர்.
மோட்டார் வாகன விதிப்படி, பைக் மற்றும் கார் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும். ஆனால், பெற்றோர்கள் பலரும், தங்களது மகன் அல்லது மகள், சிறு வயதில் கார், பைக் ஓட்டுவதை பெருமையாக அவர்களே கற்றுக்கொடுக்கின்றனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பைக் மற்றும் கார் ஓட்டும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பைக்கை பொறுத்தமட்டில், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், ெஹல்மெட் அணியாமலும் ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை பின்னால் அமர வைத்துச் செல்கின்றனர். நேற்றுமுன்தினம் தீபாவளியை ஒட்டி, சிறார்களின் அத்துமீறல் அதிகம் காணப்பட்டது.
இதுஒருபுறமிருக்க, குடியிருப்பு மட்டுமின்றி பிரதான ரோடுகளில், அதிவேகமாக கார் ஓட்டிச் செல்லும் சிறார்களால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அதிவேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் சிறார்கள், மற்ற வாகன ஓட்டுநர்களை பதற வைக்கின்றனர். பைக்கை மடக்கிப் பிடிக்க முற்படும் போலீசார், இனி கார்கள் மீதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக், கார் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.