/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றை கடந்து மயானத்துக்கு செல்ல பாலம் கட்டணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
/
ஆற்றை கடந்து மயானத்துக்கு செல்ல பாலம் கட்டணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ஆற்றை கடந்து மயானத்துக்கு செல்ல பாலம் கட்டணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ஆற்றை கடந்து மயானத்துக்கு செல்ல பாலம் கட்டணும்! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 24, 2025 11:56 PM

பொள்ளாச்சி: பொது மயானத்துக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆற்றை கடக்க, பாலம் அமைத்து தர வேண்டும், என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், புரவிபாளையம், கோவிந்தனுார் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, கோவிந்தனுாரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம மக்கள் பயன்படுத்தும் மயானம், ஊரின் தெற்கு பகுதியில் ஆற்றின் மறுபகுதியில் அமைந்துள்ளது.
கிராமத்தில் இருந்து, புரவிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட ஆற்றின் மறுபுறம், ஆற்றுபுறம்போக்கு பகுதியில் மயானம் அமைந்துள்ளது.பல ஆண்டுகளாக அந்த இடத்தில் சடலத்தை புதைக்கவும், எரியூட்டவும் பயன்படுத்தி வருகின்றோம்.
ஊர் பொதுமக்கள், தெற்கு பகுதி விவசாயிகள் இணைந்து சிறு பாலம் அமைத்து ஆற்றை கடந்து மறுகரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லவும், மயானத்துக்கு செல்லவும் பயன்படுத்துகிறோம்.
மழை காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் சிறு பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஆனைமலை வடக்கலுார் அம்மன் கோவில் ரோடு பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சடலங்களை ஆழியாறு ஆற்றின் படுகையில் புதைத்தல், எரித்தல் மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, 0.80 ெஹக்டேர் பொது மயானமாக பயன்படுத்த, ஆனைமலை பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட இடத்தை பொதுமயானமாக மாற்ற ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் மண் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இதனால், இவ்வழியாக விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இது குறித்து, ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர், ஒப்பந்ததாரரிடம், வண்டிபாதை, கழிவு அரணி கால்வாய்கள் இருந்தவாறு செப்பணிட்டு தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், இடு பொருட்கள், விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாதநிலை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.
* விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கொடுத்த மனுவில், 'தேவம்பாடி ஊராட்சியில், தனியார் கிரஷர் கல்குவாரி, 2017 - 22 வரை இயங்கியது. விவசாயிகள் தொடர் போராட்டத்தால் கல்குவாரி இயங்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது, அதையொட்டி ஐந்து ஏக்கர் பரப்பளவில் மீண்டும் கல்குவாரி துவங்க இருப்பதாக தெரிகிறது.இங்கு கல்குவாரி செயல்பட அனுமதி கொடுத்தால், நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிப்படையும். கல்குவாரி அமைக்க அரசு அனுமதிக்க கூடாது, என, வலியுறுத்தி உள்ளனர்.
* அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி அருகே கிட்ட சூராம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின் பகுதியில் இருந்து, பொள்ளாச்சி நகராட்சி இந்திரா நகர் வழியாக மகாலிங்கபுரம் வரும் சாலையை சீரமைக்க வேண்டும். இதன் வாயிலாக இப்பகுதி மக்கள் பயன் பெற முடியும்,' என, தெரிவித்துள்ளனர்.

