/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 12:09 AM
பொள்ளாச்சி; அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டது போல, தனியார் பஸ்களில், கதவு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் உள்ள அரசு பஸ்களின் வாயிலாக ஏற்படும் விபத்துகளை குறைக்க, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வகையில், ரோட்டில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பஸ்களின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விடாமல் இருக்க, டவுன் பஸ்களின் இருபுறமும் படிக்கட்டுகளுக்கு இடையே 'அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படிக்கட்டு பயணத்தை தடுக்க பஸ்களில், தானியங்கி கதவு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பஸ்சில் பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 'ஸ்டாப்' வந்தவுடன் மட்டுமே, டிரைவர் கதவை திறக்க வேண்டும். பயணியர் இறங்கி, ஏறியதுடன் கதவை மூட வேண்டும்.
அதேபோல, கண்டக்டரும் ஸ்டாப் வருவதை குரல் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்து, பயணியரை இறக்க தயார்படுத்தியும் வருகிறார். இதேபோல, தனியார் பஸ்களில், தானியங்கி கதவு அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'தனியார் பஸ்களில் இதோபோல கதவுகள் இல்லாததால், காலை, மாலை வேலை நேரங்களில் படிகளில் தொங்கிக் கொண்டே பலரும் பயணிக்கின்றனர். விபத்து அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க தனியார் பஸ்களிலும் கதவுகள் அமைக்க, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.