/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் மையத்தில் கால் கடுக்க காத்திருந்த மக்கள் கூடுதல் 'கவுன்டர்' துவங்க கோரிக்கை
/
ஆதார் மையத்தில் கால் கடுக்க காத்திருந்த மக்கள் கூடுதல் 'கவுன்டர்' துவங்க கோரிக்கை
ஆதார் மையத்தில் கால் கடுக்க காத்திருந்த மக்கள் கூடுதல் 'கவுன்டர்' துவங்க கோரிக்கை
ஆதார் மையத்தில் கால் கடுக்க காத்திருந்த மக்கள் கூடுதல் 'கவுன்டர்' துவங்க கோரிக்கை
ADDED : ஏப் 28, 2025 10:55 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகராட்சியில், ஆதார் பதிவு செய்ய கூட்டம் அதிகளவு கூடுவதால், கூடுதல் 'கவுன்டர்'கள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆதார் அட்டை புதுப்பித்தல், புதியதாக எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளிகளில் சேரும் குழந்தைகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் புதுப்பிக்க வேண்டும்.அதேபோன்று, பள்ளி படிப்பு முடிந்து கல்லுாரி செல்வோரும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் ஆதார் புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆதார் மையத்தையே பொதுமக்கள் நாடி வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் தினமும் குறிப்பிட்ட அளவு 'டோக்கன்' வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே, ஆதார் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. டோக்கன் பெற்றவர்கள் காத்திருந்த நிலையில், ஆதார் மைய பணியில் இருந்தவர் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மைய பணியாளர் வந்ததும், பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆதார் புதுப்பிக்க, நகராட்சி மையத்தில், 20 - 30 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை பெற காலை, 6:00 மணிக்கு முன்பே வந்து காத்திருக்க வேண்டியதுள்ளது.டோக்கன் பெற்றாலும், பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆதார் மையத்தில் இருப்பவர், வங்கி பணி போன்றவைக்கு வெளியே செல்லும் போது, பல மணி நேரம் காத்திருக்கும் நிலை அவ்வப்போது ஏற்படுகிறது.இன்று (நேற்று) ஆதார் மைய பணியில் இருந்தோர்தாமதமாக வந்ததால், காலை, 11:30 மணிக்கு மேல் தான் பதிவு செய்யும் பணி நடந்தது. இதனால், பொதுமக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை காணப்பட்டது.
மேலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டால், அடுத்த நாள் வர வேண்டிய நிலை உள்ளது. காலையில் உணவுடன் வந்து காத்திருந்து மாலையில் தான் செல்லும் நிலை உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளின் ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, கூடுதல் 'கவுன்டர்'கள் துவங்கவும், ஆட்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதியதாக நகரப்பகுதிகளில் ஆதார் மையங்களை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.