/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் ரப்பர் அரிசி வாங்கிய மக்கள் அதிர்ச்சி
/
ரேஷனில் ரப்பர் அரிசி வாங்கிய மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 15, 2024 10:34 PM

கோவில்பாளையம்;ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில், ரப்பர் போல் நீளுகிற அரிசி இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அன்னூர் தாலுகாவில் பொங்கலை முன்னிட்டு கொண்டையம் பாளையம் ஊராட்சி, வையம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்றுமுன்தினம் ரேஷன் அரிசி வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 100 கிராம் அளவுக்கு ரப்பர் போல் இழுத்தால் நீளுகிற அரிசி கலந்திருந்தது.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி நாராயணன் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், 'அரிசியை கொட்டி பார்க்கும்போது இதுபோல் ரப்பர் போல் இழுத்தால் நீண்டு வருகிற நீளும் அரிசி கலந்திருக்கிறது.
இதை சமைத்து சாப்பிட்டால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அகற்றி விட்டோம். அரசு தரமான அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.