/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடுகுடுப்பைக்காரர்களை மடக்கி பிடித்த மக்கள்
/
குடுகுடுப்பைக்காரர்களை மடக்கி பிடித்த மக்கள்
ADDED : பிப் 07, 2026 05:09 AM

அன்னூர்: குறி சொல்லி நகை மற்றும் பணம் பறித்ததாக குடுகுடுப்பைக்காரர்கள் ஏழு பேரை பொதுமக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அன்னூர் அருகே செம்மாணி செட்டிபாளையத்தில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு குடுகுடுப்பைக்காரர்கள் சிலர் ஊருக்குள் பாடியபடி சென்றுள்ளனர். பின்னர் நேற்று காலை 10:00 மணிக்கு ஊருக்குள் வீடு வீடாகச் சென்று குறி கூறியுள்ளனர். அப்போது துக்க சம்பவம் நடக்காமல் இருக்க பணம் மற்றும் நகை தரும்படி கேட்டுள்ளனர்.
இதில் ஒரு வீட்டில் 4 கிராம் கம்மல் கொடுத்துள்ளனர். சிலர் பணமும் கொடுத்துள்ளனர். இதை அடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஏழு பேரையும் மடக்கி பிடித்தனர். அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். குறி சொல்வதாக கூறி அச்சுறுத்தி நகை மற்றும் பணம் பறித்ததாக புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சுதன், 18. சிம்பு, 22. வல்லரசு, 23. பிரபு, 26.தனுக்கோடி, 26. மணிகண்டன் 18 மற்றும் 15 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்கள் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

