/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்
/
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்
ADDED : அக் 19, 2025 10:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெளியூரைச் சேர்ந்த பலரும் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டினர். பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டியதால், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அதேபோல, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சொந்த ஊரான வால்பாறைக்கு பலரும் சென்றனர். வால்பாறை செல்வதற்கு, குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஒரு பஸ் இயக்கப்பட்டதால், பயணிகள் சிரமமின்றி பயணித்தனர்.
அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பஸ்சில் இடம் பிடிக்க பயணிகளிடையே கடும் போட்டி நிலவும். சனிக்கிழமையே பலரும் சொந்த ஊர் புறப்பட்டதால் நேற்று வழக்கத்துக்கு மாறாக கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. கூட்டம் அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது,' என்றனர்.