/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம் :தத்தளித்த காவலாளிகள் மீட்பு
/
கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம் :தத்தளித்த காவலாளிகள் மீட்பு
கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம் :தத்தளித்த காவலாளிகள் மீட்பு
கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம் :தத்தளித்த காவலாளிகள் மீட்பு
ADDED : அக் 19, 2025 10:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.
பாலாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலை, மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாகவும், சிற்றோடைகளின் வழியாகவும் நீர் வரத்து அதிகரிப்பால், நேற்று பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாலாறு ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் உள்ள தரை மட்ட பாலத்தின் மீது தண்ணீர் அதிகளவு செல்கிறது. கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால், இரவு காவலாளிகள் மகாலிங்கம், ஜெயக்குமார், ஆகியோர் அங்கு சிக்கினர். அவர்கள், உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி அவர்களை, கோவில் வளாகத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறைந்ததும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.