/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது இடத்தில் புகைபிடித்தவர்கள் கைது
/
பொது இடத்தில் புகைபிடித்தவர்கள் கைது
ADDED : அக் 02, 2024 07:49 AM

கோவை : பொது இடங்களில் புகை பிடித்தவர்களை கைது செய்த போலீசார், விற்பனை செய்யப்பட்ட கடைகளில் இருந்து,சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பள்ளி, கல்லுாரி அருகில் பீடி, சிகிரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுததியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பேக்கரி, பெட்டிக்கடைகள் முன் புகை பிடிப்பதை, கடை உரிமையாளர்கள் அனுமதிக்கக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். மீறும் கடை, பேக்கரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ரேஸ்கோர்ஸ் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொது இடங்களில் புகை பிடித்த ஆறு பேர் மீது, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.