/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு; அவதிக்குள்ளாகும் மக்கள்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு; அவதிக்குள்ளாகும் மக்கள்
ADDED : ஆக 04, 2025 07:40 PM

வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், குறுகலான ரோட்டில் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபக்கமும் மக்கள் நடந்து செல்ல தடுப்புக்கம்பியுடன் நடைபாதை அமைக்கப்பட்டது.
ஆனால், நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளதால், மக்கள் நடந்து செல்ல இடமின்றி, ரோட்டில் நடந்து செல்கின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
குழந்தைகள் முதல் முதியவர் வரை ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்துக்குள்ளாகின்றனர். நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சமின்றி அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.