/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை சீரமைக்க களமிறங்கிய மக்கள்
/
ரோட்டை சீரமைக்க களமிறங்கிய மக்கள்
ADDED : ஜூன் 24, 2025 10:28 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சங்கம்பாளையத்தில் சேறும், சகதியுமாக இருந்த ரோட்டை பொதுமக்கள் களமிறங்கி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி சங்கம்பாளையம் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிக்கு செல்லும் மக்களுக்கு சர்வீஸ் ரோடு இன்னும் அமைக்கப்படாமல், மண் பாதையாக உள்ளது.
மழை காலங்களில் ரோட்டை கடக்க மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களே மண் கொட்டி, ரோட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சங்கம்பாளையம் காலனிக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க கோரி, பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் ரோட்டை கடக்க போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழை காலங்களில் ரோட்டை கடக்கும் போது விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.
தற்போது, மழை பெய்த நிலையில், ரோடு சேறும், சகதியுமாக இருந்ததால் பால்காரர் ஒருவரும், இரண்டு ஆசிரியர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து, ரோட்டை சீரமைக்க அனைவரும் முடிவு செய்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் மண் கொட்டி, 'பொக்லைன்' உதவியுடன் சீரமைத்துள்ளோம்.
தற்போது, ரோட்டின் ஒரு பகுதி மட்டுமே சீரமைக்க முடிந்தது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.