/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் கசிவில் வீணாகும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் மக்கள்
/
குழாய் கசிவில் வீணாகும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் மக்கள்
குழாய் கசிவில் வீணாகும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் மக்கள்
குழாய் கசிவில் வீணாகும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் மக்கள்
ADDED : ஏப் 14, 2025 10:12 PM

மடத்துக்குளம், ;குழாய் கசிவில் வீணாகும் தண்ணீரை, சேகரித்து குடிநீராக பயன்படுத்தும் நிலைக்கு நரசிங்காபுரம் கிராம மக்கள் தள்ளப்பட்டும், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நரசிங்காபுரம். தேசிய நெடுஞ்சாலையையொட்டி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக இப்பகுதி உள்ளது. கிராமத்துக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தேவையான அளவு குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை; உள்ளூர் நீராதாரங்களும் பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலையையொட்டி, குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
அவ்விடத்தில் சிறிய குழி ஏற்படுத்தி, அதில் தண்ணீரை சேகரித்து, குடிநீராக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற குடிநீரை பயன்படுத்தும் மக்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாகத்தினரும், மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.