/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளக்ஸ்களை அகற்றணும்; மக்கள் எதிர்பார்ப்பு
/
பிளக்ஸ்களை அகற்றணும்; மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2025 09:45 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், மாதக்கணக்கில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது இடங்களில், அதிக அளவு விளம்பர பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதில் போஸ்டர்கள் மட்டும் அவ்வப்போது கிழிக்கப்பட்டு மீண்டும் ஒட்டப்படுகிறது.
ஆனால் பிளக்ஸ்கள் மட்டும் ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், ரோட்டோரத்தில் மாதக்கணக்கில் அப்படியே இருக்கிறது.
மேலும், ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்கள் நாட்கள் கடந்தும் அகற்றம் செய்யப்படாததால், காற்று மற்றும் மழைக்கு கீழே விழும் நிலை ஏற்படலாம். இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மக்கள் இதைக்கண்டு அச்சப்படுகின்றனர். எனவே, பொது இடங்கள் மற்றும் ரோட்டோரம் வைக்கப்பட்ட பிளக்ஸ்களை, குறிப்பட்ட நாட்களுக்குள் எடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

