/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தல்
/
அடிப்படை வசதி ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2026 05:06 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஊஞ்சவேலாம்பட்டியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி பகுதி மக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில், இரண்டாயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளோம். இங்கு அம்பராம்பாளையம் குடிநீர் முறையாக வருவதில்லை. குறைந்தபட்சம், 20 - 25 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.
ஊராட்சியில், சாக்கடை கால்வாய்களை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் பராமரிப்பின்றி உள்ளன. அவற்றை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

